கவாய் தயாக் திருவிழாவின் முதல் நாளான நேற்று, இரவு 12 குடும்பங்கள் வசிக்கும் நீண்ட வீடு தீயில் எரிந்து நாசமானதில் 12 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 8.49 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன், சிபுஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் சுங்கை மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவற்றின் தீயணைப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் என்று, சரவாக் தீயணைப்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டறிந்த தீயணைப்புக் குழு, துரிதமா செயற்பட்டு தீயை அணைத்தனர். இதில் அந்த நீண்ட வீடு முழுமையாக அழிந்தது என்றும் , அதில் 80 நபர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.








