வணிகம் இடம்பெறும் ஒவ்வொரு கட்டிடமும் பாவனைக்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்ய, குறிப்பாக மின் வயரிங் சேதத்திலிருந்து பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய மதிப்பாய்வை மேற்கொள்ள வேண்டும்.
கடை வளாகங்கள், வணிக மையங்கள் அல்லது அலுவலகங்களை உள்ளடக்கிய வணிக கட்டிடங்கள் மின் மதிப்பீட்டிற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு பாதுகாப்பு சோதனை செய்ய வேண்டும். மின் வயரிங் பிரச்னைகளில் இருந்து கட்டடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இது செய்யப்படுகிறது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (அபிவிருத்தி) டத்தோ நோர் ஹிஷாம் முகமட் கூறினார்.
“இந்த மறுமதிப்பீடு, வளாகத்தின் உரிமையாளரால் மின்சாரம் கூடுதலாக உள்ளதா அல்லது வயரிங் சேதம் மற்றும் கசிவு உள்ளதா என்பதைக் கண்டறிய பொறுப்பான தரப்பினரால் செய்யப்பட வேண்டும்.
“தீயணைப்புத் துறையின் பொறுப்பின் கீழுள்ள கட்டிடத்தில் தீயணைப்பு அமைப்பு அல்லது வளாகத்திற்கான தீயை அணைக்கும் சான்றிதழ் இருப்பதை உறுதி செய்வது அவசியம்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தீயணைப்பு துறை மேற்கொண்ட ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 8,300 வளாகங்களில் அதாவது 30 சதவிகிதமான வணிக வளாகங்களில் தீயணைப்பு சான்றிதழ் (FC) இல்லை என்று கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.