பினாங்கு தெற்கு தீவுகள் (PSI) திட்டத்திற்காக அம்மாநிலத்திற்கு மணல் மற்றும் கற்களை விற்பதில் பேராக்கிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டத்தோஸ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.
குறித்த விற்பனையின் மூலம் பேராக் லாபம் அடைந்து, புதிய வருவாய் வருமானால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று அம்மாநில மந்திரி பெசாரான அவர் கூறினார்.
“பேராக் ஏற்கனவே மணலை விற்கிறது, எனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விலையுடன் புதிய கோரிக்கைகள் வந்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்,” என்று அவர் இன்று புதன்கிழமை (ஜூன்7) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
“ஒருபோதும் கெடா பினாங்கு தெற்கு தீவுகள் (PSI) திட்டத்திற்காக பினாங்குக்கு மணல் மற்றும் கற்களை விற்காது” என்ற கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நூரின் கூற்றுக்கு சாரணிடம் கருத்து கேட்கப்பட்டதற்கே, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், அங்கு (PSI) நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பணக்காரர்களின் நலனுக்காகவே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் , மாறாக, ஏழைகளுக்கான வீட்டுத் தேவை மிகவும் அழுத்தமான பிரச்சினையாக உள்ளது என்றும் சனுசி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.