கடந்த சனிக்கிழமை, மூவாருக்கு அருகிலுள்ள லெங்கா, ஜாலான் ஃபெல்டா மாகில்-புக்கிட் கெப்போங் சாலையோரம் உள்ளாடையுடன் மட்டுமே கிடந்த ஒரு அடையாளம் தெரியாத ஆணின் சிதைந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
காலை 11.50 மணியளவில் குப்பைக் குவியல் அருகே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் தெரிவித்தார்.
“மூவாரில் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், தலையில் ஏற்பட்ட காயம்தான் மரணத்திற்கு காரணம் என்றும், இந்த வழக்கில் குற்றவியல் கூறுகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது” என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஜாகினி அப் லத்தீப்பை 013-233 8184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ரைஸ் முக்லிஸ் கேட்டுக் கொண்டார்.









