தகர்க்கப்பட்ட அணை; வெள்ளத்தில் மூழ்கிய உக்ரைன் கிராமங்கள் – மிதந்து வரும் கண்ணிவெடிகள்..!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது.

இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.

பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கண்ணிவெடிகள் மிதப்பதாகவும், அதிகளவில் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் எச்சரித்துள்ளார். மேலும் அவர், “முன்பு போடப்பட்ட கண்ணிவெடிகள் நீரில் தற்போது மிதந்து வருகிறது. அவை வெடித்து சிதறுகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here