‘மகளே வீட்டிற்கு வா’ காணாமல்போன மகளுக்காக ஏங்கும் தந்தையின் பாசக்குரல்

கடந்த மே 1 முதல் காணாமல் போன தனது 25 வயது மகள் டான் ஷு சியை வீட்டுக்கு திரும்புமாறு அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மக்கள் ஷு சி கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தார் என்றும், அவருடன் எப்போதும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தங்கள் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் கடந்த மே 1 முதல் அவள் திடீரென்று காணாமல் போயவிட்டார், அதன் பிறகு தன்னால் அவளை அணுக முடியவில்லை என்று, அவரின் தந்தையான 57 வயது டான் பூன் சாய் கூறினார்.

“மே 20 அன்று, எனது மகள் தன்னிடம் கடன் வாங்கியதாகக் கூறிய ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது மகள் சுமார் RM2,500 கடன்பட்டிருப்பதாகவும், தற்போது கடன் RM6,000 ஆக (வட்டி உட்பட) அதிகரித்துள்ளதாகவும் என்னிடம் கூறப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மூன்று குழந்தைகளில் மூத்தவரான தந்து மகள் காணாமல் போனது கடன் பிரச்சனையால் ஏற்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும், பணம் கொடுத்தவரால் தனது மகள் காயப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கவலைப்படுவதாக பூன் சாய் கூறினார்.

தனது மகள் காணாமல் போனது குறித்து தந்தை போலீசிலும் புகார் அளித்துள்ளார என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here