விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம், 30,000 ஹெக்டேர் பரப்பளவில் முன்னோடி நெல் விவசாயத் திட்டத்தை இந்த செப்டம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
முடா விவசாய அபிவிருத்தி அதிகாரசபையுடன் (MADA) இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் நெல் உற்பத்தியை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக “இரண்டு ஆண்டுகளில் ஐந்து பருவங்கள்” நெல் சாகுபடி செய்யும் முயற்சியை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக முகமட் சாபு இவ்வாறு கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் சிறிய முயற்சி (முன்னோடி) சிலாங்கூரில் உள்ள செகிஞ்சானில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தத் திட்டம் பெரியளவில் செயல்படுத்தப்படும், இந்த திடடம் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 7 முதல் 12 மெட்ரிக் டன் நெல்லை உற்பத்தி செய்ய முடிந்தது என்றார்.
“புதிய தொழில்நுட்பம் மற்றும் இரண்டு ஆண்டுகளில் ஐந்து பருவங்களில்” நெல்லை நடவு செய்வதன் மூலம், அரிசி உற்பத்தியில் நாம் தன்னிறைவு நிலையை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.