லங்காப், தெலுக் இந்தானில் உள்ள 26 வயது பெண் ஒருவர் வேலை மோசடியில் சிக்கி, மொத்தம் RM139,616 இழந்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஏப்ரல் 26 அன்று வாட்ஸ்அப் மூலம் பல பணிகளைச் செய்து, கமிஷன் சம்பாதிப்பதற்காக பகுதி நேர வேலை வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார், பின்னர் அவர் டெலிகிராம் அரட்டை குழுவில் சேர்க்கப்பட்டார் என்று, ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை துணை தலைவர், அஹ்மட் அட்னான் பஸ்ரி கூறினார்.
“முதல் பணியாக பாதிக்கப்பட்டவர் ஒரு நிறுவனத்தின் இணையதளத்தை பேஸ்புக்கில் பகிர்வதன் மூலம் அதனை பிரபலத்தை அதிகரித்து, பின்தொடர்வோரையம் அதிகரிக்க வேண்டும், அதில் அவர் 10% கமிஷன் பெற்றார்” என்று, அவர் இன்று வெள்ளிக்கிழமை (மே 12) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
“அபெண்ணின் இரண்டாவது பணிக்காக, ஆன்லைன் ஷாப்பிங் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தவும், சில பொருட்களை குறிப்பிட்ட விலையில் தேர்ந்தெடுக்கவும் கூறப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் 20% கமிஷன் பெற ஒரு தொகையை வாங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எனவே பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை மொத்தம் RM139,616.50 மொத்தம் 13 ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை நான்கு நிதி நிறுவனங்களுக்கு செய்துள்ளார்.
அனாலும் “பாதிக்கப்பட்ட பெண்ணின் பணத்தை திரும்பப் பெற அதிக பணம் வைப்பிலிடுமாறு கூறப்பட்டது. இதனால் அப்பெண் ஏதோ தவறாக உணர்ந்ததால், அவர் அவ்வாறு செய்யவில்லை, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தாள்,” என்றும், இது தொடர்பில் அவர் நேற்று வியாழன் (மே 11) நள்ளிரவு 12.25 மணியளவில் போலீசில் புகாரளித்தார்.









