பேராக் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட RM87,979 மதிப்புள்ள போலி காலணிகள், பிராண்ட் ஸ்டிக்கர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் என்பன கட்டளையின் பேரில் அழிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 16, 2022 அன்று, பேராக், ஜாலான் சுல்தான் அப்துல் ஜாலீலின் வணிக வளாகத்தில் நடந்த ஒரு நடவடிக்கையின் போது இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதன் இயக்குனர் டத்தோ கமலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
“இதில் 2,845 ஜோடி காலணிகள், 800 ஸ்டிக்கர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் அடங்கும். நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்ததையடுத்து குறித்த பொருட்களை அப்புறப்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளோம்,” என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) கெமோரில் உள்ள உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறையின் களஞ்சிய கிடங்கில் சந்தித்தபோது கூறினார்.
“இந்த போலி பொருட்களை வைத்திருந்த உரிமையாளருக்கு RM30,000 அபராதம் விதிக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறையினரால் கைப்பற்றப்பட்ட RM1.369 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் இந்த ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டதாக கமாலுதீன் மேலும் கூறினார்.