பெலான்டெக் சட்டமன்ற உறுப்பினர் முகமது இசா காலமானார்

அலோர் ஸ்டார்: பெலான்டெக் சட்டமன்ற உறுப்பினர் இசா ஷாஃபி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. அவரது மரணம் குறித்த செய்தியை கெடா மந்திரி பெசார் சானுசி நோர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுங்கைப்பட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் (ஈசா) இரவு 11.23 மணிக்கு இறந்ததாக எனக்குச் செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, கெடா பாஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த இசா, கடந்த மாதம் இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது.

14ஆவது பொதுத் தேர்தலில் பெலான்டெக் மாநிலத் தொகுதியில் பாரிசான் நேசனலின் தாஜூடின் அப்துல்லா மற்றும் பிகேஆரின் அப்துல் ரஷீத் அப்துல்லாவை வீழ்த்தி 2,574 வாக்குகள் பெரும்பான்மையுடன் இசா வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here