தங்காக்: மேம்படுத்தும் பணிகளுக்காக ஓராண்டாக மூடப்பட்ட குனுங் லெடாங் நீர்வீழ்ச்சி அடுத்த மாதம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ், நீர்வீழ்ச்சி மீண்டும் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று மாநில அரசு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். மேலும் சுற்றுலா தலத்திற்கான விளம்பர முயற்சிகளை மாநில அரசு தீவிரப்படுத்தும் என்றும் கூறினார்.
குனுங் லெடாங் நீர்வீழ்ச்சியின் நிர்வாகம் இந்த பகுதியை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் நிலையம் மற்றும் கேரவன் தளத்தையும் அமைக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
குனுங் லெடாங் ஜோகூர் தேசிய பூங்கா (Lagenda) வசதிகளையும் நான் பார்வையிட்டேன். இந்த தேசிய பூங்காவிற்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அறைகள் மற்றும் குடிசைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நான் ஆராய்ந்தேன் என்று அவர் இன்று பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.
எனவே, சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் பட்ஜெட்டை குறிப்பிடுவதற்காக, மாநில அரசு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்துடன் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று அவர் கூறினார்.