மீ தயாரிப்புக் கடையில் பாராங்கத்தி முனையில் கொள்ளை முயற்சி .

உலுசிலாங்கூர், 

 உலுயாம் பாரு. உலுசிலாங்கூரில் மீ தயாரிப்புக் கடையில் புகுந்த பாராங்கத்தி வைத்திருந்த இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை 6.42 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. கறுப்பு நிற உடை, தொப்பி, முகமூடி அணிந்திருந்த அவ்விருவரும் பாராங்கத்தியால் அங்கிருந்தவரைத் தாக்கிய காட் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஜூன் 18ஆம் தேத இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்று உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ்இடைக்கால தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார். உலுயாம் பாருவில் உள்ள மீ தயாரிப்பபுக் கடைக்குள் அவ்விருவரும் பின்புறக் கதவு வழியாக நுழைந்துள்ளனர்.

பாராங்கத்தியால் அங்கிருந்தவரைத் தாக்க முயன்றனர். அவர் பயத்தால் அலறியபோது அந்த இருவரும் எந்தப் பொருட்களையும் எடுக்காமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். ஆயுதமேந்திய கொள்ளையர்களைத் தேடும்பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த பொதுமக்கள் 03-6064 1132 எனும் தொலைபேசி எண்களில் உலுசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here