சமீபத்தில் வணிக நிர்வாகத்தில் முனைவர் (PhD) பட்டம் பெற்ற பெண் ஒருவர் ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங் பெர்டானாவில் உள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
நேற்று மாலை 3.06 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரிடமிருந்து தமது துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்று, செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஏ. ஏ. அன்பழகன் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்பு 34 வயதான பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் ஒரு இரவு விருந்தில் கலந்துகொண்டனர். “அவ்விழாவின் போது, வழக்கம் போல் அல்லாமல், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல குறித்த பெண் காணப்பட்டார்,” என்று நேற்று கூறினார்.
“அந்தப் பெண்ணின் தாய் இறந்துவிட்டதால், அவளது தந்தையும் கணவரும் மட்டுமே சொந்த ஊரில் இருக்கிறார்கள். “தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அந்த பெண் தனது சொந்த கிராமத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடையவில்லை” என்று அவர் கூறினார்.
“இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை செர்டாங் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகளுக்காக போலீசார் இன்னும் காத்திருக்கிறார்கள்.
“இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.















