மாநில தேர்தல்: சிலாங்கூரில் 7,500 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

வரவிருக்கும் மாநில தேர்தல் காலங்களில் சிலாங்கூர் முழுவதும் சுமார் 50 விழுக்காடு அல்லது 7,500 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

குறிப்பாக வேட்புமனு தாக்கல் தேதி, பிரச்சாரம் மற்றும் வாக்களிக்கும் நாள் ஆகியவற்றின் போது போலீசார் பணியில் இருப்பர் என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறினார்.

“தேர்தலுக்கு முன்னும் பின்னும் கட்டுப்பாடு தொடர்பாக கடந்த மாதம் முதல் தாம் முழுமையான தயாரிப்பு மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நாங்கள் செய்துள்ளோம்” என்று அவர் இன்று சிலாங்கூர் போலீஸ் குடும்ப வன்முறை பிரச்சாரத்தில் சந்தித்தபோது, செய்தியாளர்களிடம் கூறினார்.

சிலாங்கூர் ஆளுநர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 14வது தவணைக்கான சிலாங்கூர் மாநில சட்டப் பேரவை (DUN) கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

சட்டமன்றம் கலைக்கப்பட்டவுடன், சிலாங்கூர் நிர்வாகம் இப்போது PRNக்குப் பிறகு ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here