கடந்த ஜூன் 27ஆம் தேதி பிலிப்பைன்ஸ் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இணைய வேலை மோசடிக்கு எதிரான நடவடிக்கையில் (POGO) இணைய வேலை மோசடியால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் 134 பேரில் 127 பேர் மலேசியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் 127 நபர்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விரைவில் நாடு திரும்புவதற்கு தூதரகம் வேண்டிய உதவிகளை வழங்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் காவல்துறை அதிகாரிகள் உள்ளக விசாரணை மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், பாதிக்கப்பட்டவர்களை நாடு கடத்தும் செயல்முறையை முதலில் தொடங்குவார்கள்.
“பாதிக்கப்பட்ட மலேசியர்கள் அனைவரையும் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
“இந்த விஷயம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








