இன்று புக்கிட் பீசி அருகே 375.4 ஆவது கிலோமீட்டரில், கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2-ல் கவிழ்ந்தைருந்த கூரியர் லோரியின் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 6.20 மணிக்கு நடந்த விபத்தில், பலியானவர் ஜோகூர், மசாயைச் சேர்ந்த 50 வயதான ஹீ கோக் கியாங் என அடையாளம் காணப்பட்டார்.
அவரின் நண்பர்கள் ஒருவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது, அத்தோடு வங்களாதேசத்தை சேர்ந்த அவ்வேன் ஓட்டுநரின் இரு கால்களும் உடைந்தது என்று, டுங்கூன் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் பஹருடின் அப்துல்லா கூறினார்.
சம்பவத்தின் போது, கூரியர் பொருட்களை ஏற்றிச் சென்ற லோரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது, இந்த லோரி ஜோகூர், பத்து பஹாட்டில் இருந்து கோலா திரெங்கானுவிற்கு சரக்கு எடுத்துச் செல்லும் வழியில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தோயோத்தா ஹையஸ் வகை வேன், கிளாந்தான் செல்லும் வழியில் இரண்டு நண்பர்களுடன் சென்றபோது,
பின்பக்கப் பயணி இருக்கையில் இருந்த கோக் கியாங், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் கூரியர் லோரி ஓட்டுநரின் நெற்றி மற்றும் இடுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.