பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கைப் பற்றி அவதூறான டுவீட்டைப் பதிவிட்டதற்காக @Zaki_Yamani_ என்ற பெயரில் டுவிட்டர் பயனர் மன்னிப்புக் கேட்டார்.
“பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நண்பர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு, எனது கருத்துகள் உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் இன்று (ஜூலை 3) வெளியிட்டுள்ள ஒரு டுவீட்டில் கூறினார்.
கடந்த சனிக்கிழமை ஹாடி அவாங்கின் உடல்நிலை மோசமாக உள்ளது என்ற செய்திகளின் அடிப்படையில், குறித்த டுவிட்டர் பயனர் “ஹாடி அவாங்கின் மரணத்திற்காக பிரார்த்திப்பதாக “ டுவிட்டரில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
குறித்த கருத்திற்கு மன்னிப்பு கோரினார் பிரதமர் நேற்றுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.