தந்தையை கொலை செய்த மகனை மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவு

பெந்தோங்: தனது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞரை மனநல கண்காணிப்பிற்காக பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்ப இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதி அரசு வழக்குரைஞர் எஸ்.புனிதாவினால் நடத்தப்பட்ட வழக்குத் தொடரின் கோரிக்கையை அடுத்து மாஜிஸ்திரேட் காசிரத்துல் ஜன்னா உஸ்மானி உஸ்மான் இந்த உத்தரவை பிறப்பித்தார். வழக்கின் மறுதேதி  ஆகஸ்ட் 3க்கு என நிர்ணயித்தார்.

முன்னதாக, கான் காங் சென் 22 வயதுடைய மாற்றுத்திறனாளி என்று (PwD), குற்றச்சாட்டு  வாசிக்கப்பட்டபோது தலையசைத்தார். ஆனால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு ஜூன் 22 மற்றும் 24 க்கு இடையில் ஜாலான் ட்ராஸில் உள்ள பிளாட் பூர்ணமா, தாமான் ஜெமிலாங்கில் 64 வயதான கான் கோக் சோங்கைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12க்கும் குறையாத பிரம்படிவழங்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here