நண்பர்களுடன் குளிக்க சென்ற சந்தோஷ் நீரில் மூழ்கி பலி

ஈப்போ, பதின்ம வயது சிறுவன், தனது நண்பர்கள் மூவருடன்  உலு கிந்தா, சுங்கை தங்காங், கம்போங் ஒராங் அஸ்லி என்ற இடத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர் சயானி சைடன் கூறுகையில், மாலை 5 மணியளவில் இச்சம்பவம் குறித்து திணைக்களத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது.

தம்பூன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், நீரில் மூழ்கியதாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட கே. சந்தோஷ் 18, கிராமத்தைச் சேர்ந்த ஒராங் அஸ்லியால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சயானியின் கூற்றுப்படி, சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர். உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் நடவடிக்கை இரவு 7 மணிக்கு முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here