கோலாலம்பூரில் ஊழல் எதிர்ப்பு பேரணி அமைதியாக நடந்து முடிந்தது

கோலாலம்பூர்:

“Himpunan Rakyat Benci Rasuah” என்று அழைக்கப்படும் ஊழல் எதிர்ப்பு பேரணி, கோலாலம்பூரில் அமைதியாக நடைபெற்றது.

அரசு சாரா அமைப்புகள் மற்றும் மாணவர் ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில், இன்று (ஜனவரி 25) சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2 மணியளவில், பேரணியில் பங்கேற்றவர்கள் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள Sogo ஷாப்பிங் மால் முன் ஊழல் எதிர்ப்பு கருப்பொருள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி ஒன்று கூடினர், அதேநேரம் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் அங்கு நிலைமையைக் கண்காணிக்க உடனிருந்தனர்.

பின்னர் பிற்பகல் 2.40 மணிக்கு, பங்கேற்பாளர்கள் நான்கு சக்கர வாகனத்தின் பாதுகாப்புடன் டத்தரான் மெர்டேக்காவை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர்.

தலைநகரில் எந்த சாலையும் மூடப்படாததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றபோது அது சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

கோலாலம்பூர் DBKL உறுப்பினர்களால் வைக்கப்பட்ட தடைகளை மீறி, போராட்டக்காரர்கள் டத்தரான் மெர்டேகாவிற்குள் மற்றும் பங்குனான் சுல்தான் அப்துல் சமத்தின் முன்பக்கம் அணிவகுத்துச் சென்றனர். அங்கு பல மாணவர் சமூக ஆர்வலர்களின் உரைகள் இடம்பெற்றது.

மாலை சுமார் 4.30 மணியளவில், பேரணி எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக முடிவடைந்தது என்று, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் கமாண்டர் டத்தோ ருஸ்டி முகமட் இசா உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here