சாலை விபத்தில் முதியவர் பலி; 5 மாதக் குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

ஜெரான்துட்:

இங்குள்ள ஜாலான் ஜெரான்துட்-மாரானின் (சுங்கை சலான்) 12 ஆவது கிலோமீட்டரில் இன்று நடந்த விபத்தில், ஐந்து மாத குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று மதியம் 1 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், புரோத்தோன் எக்ஸோரா பல்நோக்கு வாகனத்தின் முன்பக்க இருக்கை பயணியான 83 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று,
ஜெரான்துட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மஸ்லான் ஹாசன் கூறினார்.

25 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பல்நோக்கு வாகனத்தில் பயணம் செய்தவர்கள் ஃபெல்டா கெலாங்கி சாதுவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

“சம்பவ இடத்தில், பல்நோக்கு வாகன ஓட்டுனர் தனக்கு முன்னால் வந்த ஒரு வாகனத்தை தவிர்க்க தவறியதால், அது ஒரு Isuzu டிரக் மீது மோதியதாக நம்பப்படுகிறது.

“இந்த விபத்தின் விளைவாக, பல்நோக்கு வாகனம் தீப்பிடித்தது, மேலும் பாதிக்கப்பட்ட அனைவரையும் பொதுமக்களால் வெற்றிகரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பலத்த காயமடைந்தவர்கள் அனைவரும் ஜெரான்துட் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here