புத்ராஜெயா:
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவின் வட பகுதியில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, 12 மலேசியர்களைக் கொண்ட குழுவினர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த குழுவைக் கண்டறியும் முயற்சிகளை வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இன்று புதன்கிழமை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்திய அதிகாரிகளுடன் இணைந்து புது டில்லியில் உள்ள மலேசிய தூதரகம் வழியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் ஹம்ப்டா பாஸில் சாகசப் பயணத்தில் சம்பந்தப்பட்ட குழு பங்கேற்றதாக உயர் மலேசிய தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
“இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் நிலை குறித்த சமீபத்திய தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.