சிறுவனிடம் அலட்சியமாக செயல்பட்டு மரணத்திற்கு காரணமான மழலையர் பள்ளி ஆசிரியர் எஸ்தர் கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு

ஈப்போ: பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங்கில் உள்ள குளத்தில் மூழ்கி இறந்த நான்கு வயது சிறுவனை அலட்சியப்படுத்தியதாக மழலையர் பள்ளி ஆசிரியர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

எஸ். எஸ்தர் கிறிஸ்டினா 58, தனது பராமரிப்பில் இருந்த வி. தனேஸ் நாயர் என்ற சிறுவனை ஏப்ரல் 17 ஆம் தேதி காலை ஒரு காரணமின்றி கவனிக்காமல் விட்டுச் சென்றதாக கூறும் விஷயத்தில் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாராணை கோரினார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி காலை 10.20 மணியளவில் சென்ட்ரோ கிளப், பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங்கின் நீச்சல் குளத்தில் அவர் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 33(1)(a) இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது அதிகபட்சமாக RM20,000 அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையின் போது விதிக்கப்படும்.

துணை அரசு வக்கீல் சியாஹிரா அசாஹர் RM6,000 விதிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல், கேரி சேவியர் தனது வாடிக்கையாளரின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் ஒரு மாதத்திற்கு RM2,200 மட்டுமே வருவாய் ஈட்டுவதோடு 80 வயதான அவரது தாயாரை கவனித்து கொள்ள வேண்டும் மற்றும் விசாரணையின் போது முழுமையாக ஒத்துழைத்தார் என்று கூறினார்.

மாஜிஸ்திரேட் Jesseca Daimis ஒரு நபர்  உத்தரவாதத்துடன் 2,500 ஜாமீன் நிர்ணயித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வழக்கிற்கான தேதியாக நிர்ணயித்தார்.

சம்பவத்திற்குப் பிறகு ஆறு நாட்கள் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய தனேஸ் ஏப்ரல் 23 அன்று இறந்தார்.

அவரது தாயார் டி.நீலவேணி 40, நீதிமன்றத்தில் அவரது மறைந்த மகனின் உடைகள் மற்றும் தொப்பி என்று நம்பப்படும் ஒரு துணியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்.

தங்கள் மகன் இறந்த பிறகு நீலவேணியும் அவரது கணவரும் பண்டார் ஸ்ரீ கிளேபாங்கில் உள்ள பாலர் பள்ளியில் இருந்து ஈப்போ போலீஸ் தலைமையகத்திற்கு வெறுங்காலுடன் நடந்து தனேஸுக்கு நீதி என்ற பதாகைகளை ஏந்தி செல்வதைக் காட்டும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here