GM KLANG சமூக வணிக செயலிக்கு பொதுமக்களிடம் இருந்து அமோக ஆதரவு

ஜி.எம். கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் புத்தாக்க முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் GM KLANG Business Community APP எனப்படும் சமூக வணிக செயலியை பொதுமக்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது.

நாடு முழுவதும் இதுவரை இந்த செயலியை 8,000 முறை வெற்றிகரமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஜி.எம். கிள்ளான் மொத்த வியாபாரத் தளத்தை யும் தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலி யாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வழி வணிகத்திற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் பெறக்கூடிய அம்சங்களை இந்தச் செயலி கொண்டிருக்கிறது.

தொழில்முனைவோர்களின் விருப்பத் தேர்வுக்கும் அது பயன்படுகிறது என்று ஜி.எம்.கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் பிராண்ட் தொடர்பு உயர்நிலை நிர்வாகி நோர் சுஹாய்டா ஒஸ்மான் கூறினார். இந்த செயலியைப் பயன்படுத்தி இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் எங்களது மொத்த வியாபாரிகளோடு தொழில்
முனைவோர்கள் Business Matching வழி 150 சந்திப்புகளை நடத்தியிருக்கின்றன.இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக தொழில் முனைவோர்கள் இந்தச் செயலியின் பயன்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த எண்ணிக்கை அதிகரிப்பு தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் கூடுதல் அம்சமாக மொத்த வியாபாரிகளும் தொழில் முனைவோர் ஆய்விலான வாய்ப்புகளை ஆக்கப்பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் இந்தச் செயலி வகை செய்கிறது. அதேசமயம் இந்தச் செயலியைப் பயன்படுத்துவோர் எங்களது ஸ்டூடியோவில் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடிய அழகிய வடிவிலான விளம்பரங்களை இலவசமாக வடிவமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் இந்தச் செயலியின் பயன்பாடு மீது அதிகமானோர் திருப்தி கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தொழில் அல்லது வணிகம் தொடங்க விரும்புகின்றவர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஜி.எம்.கிள்ளான்தான் தங்களுடைய தேர்வு என்ற முடிவுக்கு வருவதற்கும் இச்செயலி பெரும் துணையாக இருக்கின்றது என்று நோர் சுஹாய்டா கூறினார்.

எங்கு புதிய கடைகள் திறக்கப்படுகின்றன? சமீபத்திய தகவல்கள் என்ன என்ன என்பதையும் ஜி.எம். சமூக வணிக செயலிக்குள் குவிந்து வருகின்றன.


ஒவ்வொரு முறையும் இதன் தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் இதன் அறிவிப்புப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தச் செயலியைப் பயன்படுத்தும் அனைவரும் சமீபத்திய நிலவரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும் வருகையாளர்கள், பொதுமக்கள் ஆகியோ ரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஜி.எம். கிள்ளான் மதிப்பிடுகிறது. பல்வேறு வர்த்தக வசதிகள், தகவல்கள் போன்றவை அவ்வப்போது இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வழி ஜி.எம்.கிள்ளான் உடன் இணைந்து வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு முழுத் தகவல்களை வழங்கக்கூடிய தளமாகவும் ஜி.எம். கிள்ளான் வணிக சமூகச் செயலி விளங்கும் என்று நோர் சுஹாய்டா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here