ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் கொரோனா காரணமாக பசியால் தவிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
























