முகேன் நடிக்கும் அடுத்த படம் அடுத்த வெற்றியா?

‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ‘பார்க்கிங்’ திரைப்பட புகழ் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

மணிக்கண்ணன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here