குறைவான செலவில் வாழ்க்கையை நடத்த மிகச் சிறந்த நாடு மலேசியா -அமெரிக்க சஞ்சிகை

கோலாலம்பூர்: வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மாதத்துக்கு 2,000 டாலருக்கும் குறைவான செலவில் வாழ்க்கையை நடத்த ஆகச் சிறந்த நாடு மலேசியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் நாஸ்டாக் பங்குச் சந்தை நடத்தும் கோபேங்கிங்ரூல்ஸ் நிதி சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் மலேசியா முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்கர்கள் ஓய்வுபெறுவதற்கு ஆகச் சிறந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு அடுத்தபடியாக குவைத் இரண்டாம் இடத்தில் வந்தது. மங்கோலியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

வியட்னாம் நான்காவது இடத்திலும் இந்தோனீசியா ஐந்தாவது இடத்திலும் முடித்தன. ஜோர்தான், கம்போடியா, ஓமான், சைப்ரஸ், நேப்பாளம் ஆகிய நாடுகள் பட்டியலின் எஞ்சிய இடங்களைப் பிடித்தன.

ஓய்வுபெற்ற பிறகு மாதந்தோறும் கட்டுப்படியான செலவில் காலத்தைக் கழிப்பதற்கு ஆகச் சிறந்த பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காண பட்டியல் வரையப்பட்டதென கோபேங்கிங்ரேட்ஸ் தெரிவித்தது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகள் ஆசிய, மத்திய கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்தவை.

மலேசியாவில் வாழ மாதந்தோறும் சராசரியாக 1,069 டாலர் தேவை என்பது இதன் மூலம் தெரிய வந்தது. அந்நாட்டின் பாதுகாப்புக் குறியீடு 1.471.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 481.9 ட்ரில்லியன் டாலர் என்று கோபேங்கிங்ரேட்ஸ் குறிப்பிட்டது. அது, ஓய்வுபெறுவோருக்கான சிறந்த நாடு என்றும் சஞ்சிகை கூறியது.

குவைத்தில் வாழ மாதந்தோறும் சராசரியாக 1,741 டாலர் தேவை. அதன் பாதுகாப்புக் குறியீடு 1.739.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here