கோத்தா பாரு மாவட்டத்தில் கோடாரி மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி, கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 முதல் 36 வயதுடைய மூன்று சகோதரர்களில், இருவர் ஜாலான் கம்போங் ஸ்ரீ கூலிம், மெலூரில், இரவு 8.15 மணியளவிலும் மற்றவர் மெலூரில் உள்ள ஒரு கைத்தொலைபேசிக் கடையின் முன்பும் நேற்று கைது செய்யப்பட்டனர் என்று,
கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ரோஸ்டி தாவூட் கூறினார்.
ஜூலை 15 முதல் நேற்று வரை, இந்த மாவட்டத்தைச் சுற்றி நடந்த தொலைபேசிக் கடை கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கோத்தா பாரு போலீஸ் தலைமையகத்திற்கு மூன்று புகார்கள் கிடைத்தன.
“மூன்று சம்பவங்களும் ஒரே மாதிரியான செயல்பாட்டில் உள்ளன, அதாவது சந்தேக நபர்கள் கோடரி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்தனர், பின்னர் பணத்தையும் மொபைல் ஃபோனையும் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று அவர் கூறினார்.
“தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், மூன்று சகோதரர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சோதனையின் விளைவாக, அவர்களில் இருவருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் பல தண்டனை பதிவுகளை வைத்துள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் முதற்கட்ட சோதனையின் முடிவுகள் மூன்று சந்தேக நபர்களில் இருவர் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த மூன்று சந்தேக நபர்களும் ஜூலை 15 முதல் இந்த மாவட்டத்தில் உள்ள கைத்தொலைபேசி வணிக வளாகத்தில் கோடாரி மற்றும் கத்தி போன்ற ஆயுதம் ஏந்திய மூன்று கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு கோடாரி, மொபைல் போன் மற்றும் ஹெல்மெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
“தண்டனைச் சட்டம் பிரிவு 395 மற்றும் பிரிவு 397 இன் படி விசாரணைக்கு உதவ அவர்கள் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.








