கங்கார், ஜாலான் புக்கிட் லாகியில் உள்ள 4D இலக்க கடைகள், அதன் வணிக வளாக இயக்க உரிமம் வரும் திங்கட்கிழமை காலாவதியானதை அடுத்து, அதன் கடைகளை இன்று இறுதியாக மூடியுள்ளது.
PAS தலைமையிலான அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெர்லிஸ் மாநிலத்தில் மூடப்படும் முதல் கடை இதுவாகும்.
மாநிலத்தில் உள்ள ஆறு சூதாட்ட வளாகங்களில் இயக்க உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று கங்கார் நகராண்மைக் கழகம் நேற்று அறிவித்ததாக, நேற்று ஒரு இணைய போர்டல் செய்தி வெளியிட்டுள்ளது.
கங்காரில் மூன்று, பாடாங் பெசாரில் இரண்டு, கோலா பெர்லிஸில் ஒன்றும் என மொத்தம் 6 சூதாட்ட வளாகங்கள் இயங்கிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாந்தான், திரெங்கானு மற்றும் கெடாவிற்குப் பிறகு சூதாட்ட வளாகங்களுக்கான உரிமங்களை வழங்குவதை நிறுத்தும் நான்காவது பாஸ் கட்சியின் ஆளுகையின் கீழ் உள்ள மாநிலமாக பெர்லிஸ் உள்ளது.









