கடந்த வெள்ளிக்கிழமை வழக்கறிஞர் சித்தி காசிமின் காரில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சாட்சிகள் உட்பட பல நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கோலாலம்பூர், ஜாலான் மரோப்பில் உள்ள ஒரு வாகன சேவை மையத்தில் சமூக ஆர்வலருமான சித்தி காசிமின் காரின் பின் டயரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்தார்.
“நாங்கள் சம்பவ இடத்தில் இருந்த பல நபர்களிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்து, குறித்த விஷயத்தை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக , சித்தி, தனது பேஸ்புக் கணக்கில் நேரடி ஒளிபரப்பு மூலம், தனது கார் டயரில் வெடிகுண்டு போன்ற பொருள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.









