மஞ்சோங்: தாமான் நேசா சித்தியவான் என்ற இடத்தில் இன்று காலை விரைவுப் பேருந்தும் மற்றொரு காரும் மோதியதில் முதியவர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யோங் தியோ காங் 79 மற்றும் யோங் மூய் மூய் 68, ஆகிய இருவரும் பயணம் செய்த புரோட்டான் பெர்சோனா காரில் சிக்கி இறந்தனர். காலை 6.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மத் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பயணிகளுடன் கூடிய விரைவுப் பேருந்து, புரோட்டான் பெர்சோனா மற்றும் புரோட்டான் சாகாவுடன் விபத்துக்குள்ளாகியிருந்தது. புரோட்டான் பெர்சோனாவில் சவாரி செய்த இரண்டு மலேசியர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இறந்தது உறுதி செய்யப்பட்டது. புரோட்டான் சாகாவின் ஓட்டுநர் மற்றும் விரைவுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காலை 7.33 மணிக்கு மீட்புப்பணி நிறைவடைந்தது.















