சிலாங்கூரில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு 50 மஇகா தலைவர்கள் ஆதரவு

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தின் 56 மாநில சட்டப் பேரவைகளிலும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு (PN) ஆதரவளிப்பதாக மாநிலம் முழுவதும் உள்ள 50 மஇகா தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பான் – மற்றும் பாரிசான் நேசனல் (PH-BN) கூட்டணியில் மஇகா நியாயமாக நடத்தப்படவில்லை என்றும், மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் அவலநிலையை அக்கூட்டணி புறக்கணித்ததாகவும் மஇகா மத்திய குழு (CWC) உறுப்பினர் பார்த்திபன் கருப்பையா வெளியிட்டுள்ள PN ஆதரவு அறிக்கையில் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, சிலாங்கூரில் நான்கு இந்திய வேட்பாளர்களை நிறுத்திய பக்காத்தான் ஹராப்பான் – மற்றும் பாரிசான் நேசனல் (PH-BN) கூட்டணியுடன் ஒப்பிடும்போது, ​​ஆறு வேட்பாளர்களை குறித்த தேர்தலில் பிரதிநிதித்துவப்படுத்துவததாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) அறிவித்தபோது, ​​இந்திய இனத்தின் தலைவிதியைப் பாதுகாப்பதில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) உறுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.

“6 மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற மஇகா மத்திய குழுவின் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

முன்னதாக, அவர் ஏனைய 50 மஇகா தலைவர்களுடன் சேர்ந்து, சிலாங்கூர் பாஸ் அலுவலகத்தில் சிலாங்கூர் பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோ டாக்டர்.அஹ்மட் யூனுஸ் ஹைரியை சந்தித்து, தங்களது ஆதரவளித்த தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here