உலு கிளாங் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில், மக்கள் பிரச்னைகளை கையாள்வதில் நடப்பு அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் தோல்வியால், கோம்பாக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் அதிருப்தியாகவே உள்ளனர் . ,” என்று பெரிக்காகத்தான் நேஷனலின் (PN) உலு கிளாங் வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.
உலு கிளாங் மாநில சட்டமன்ற வேட்பாளரான அவர் (N18) ஒற்றுமை அரசு மீதான மக்களின் அதிருப்தி அலை ஆறு மாநிலத் தேர்தல்களில் பெரிக்காகத்தான் நேஷனலுக்கான வாக்குகளை பெற வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
“புத்ராஜெயாவின் தற்போதைய தலைமையால் மக்கள் அலுத்துப்போய் சோர்வடைந்துள்ளனர். ஏனெனில் நாட்டின் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் பொருளாதாரப் பிரச்சனைகள், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நாட்டைப் பாதிக்கும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லை.
“எனவே, நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் வெற்றிகரமான நிர்வாகத்துடன் அவர்கள் அதை ஒப்பிடும்போது, அவரின் கீழ் இருந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தொற்றுநோயை வெற்றிகரமாக நிர்வகித்தது, இது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மொத்தமாக RM520 பில்லியன் மக்களுக்காக வழங்கப்பட்டது. இது நாட்டின் நிதி வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார ஊக்கத் திட்டம் என்பதை மறைக்கவோ மறக்கவோ முடியாது.
“அந்த நேரத்தில் தொற்றுநோயை நிர்வகிப்பதில் PN தலைவரின் விரைவான நடவடிக்கையின் காரணமாக, மலேசியா சம்பந்தப்பட்ட நெருக்கடியை கையாள்வதில் சிறந்த நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.
“எனவே நம் தாய் நாட்டின் கண்ணியத்தை நிர்வகிப்பதற்கும் உயர்த்துவதற்கும், சிலாங்கூர் மாநிலத்தையும் இந்த நாட்டையும் செழிக்க வைக்கும் திறமையும் திறனும் PN க்கு உள்ளது என்பதை மக்கள் காண்பதற்கு இது ஒரு அனுபவம் ” என்று அவர், உலு கிளாங் சட்டமன்றத் தொகுதியின் வேட்ப்பாளர் என அறிவிக்கப்பட்ட பின்னர், அஸ்மின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.