அபராதத்தில் இருந்து தப்பிக்க அடையாள அட்டை தொலைந்து போனதாக போலீசில் போலிப் புகாரளித்த பெண் கைது

MyKad தேசிய அடையாள அட்டையை தொலைத்ததற்காக, அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக போலியான போலீஸ் புகார் அளித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அன்று மாலை 5 மணியளவில் தான் திருட்டுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்தார் என்று, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முஹமட் ஆசாம் இஸ்மாயில் கூறினார்.

“தன் காதலனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து சவாரி செய்தபோது, இந்த சம்பவம் நடந்ததாகவும், அப்போது “மோட்டார் சைக்கிள் ஓட்டும் சந்தேக நபர் ஒருவர், தனது தனிப்பட்ட உடைமைகள் அடங்கிய கைப்பையைப் பறித்தார் என்று கூறியதாக, OCPD ஆசாம் இன்று திங்கள்கிழமை (ஜூலை 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் விசாரணையை எளிதாக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) வரை பெண் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று OCPD ஆசாம் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

தொலைந்து போன அடையாள ஆவணங்களை மாற்றியமைப் பதற்காக தேசிய பதிவுத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, குறித்த பெண் பொய்யான அறிக்கைகளைப் பதிவுசெய்வதற்கு முன்வந்தார் என்றும், இது சட்டப்படி தவறான அணுகல் என்று பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here