சமையல் நிபுணர் செஃப் வானுக்கு புற்றுநோய்

பெட்டாலிங் ஜெயா, அகஸ்ட்டு 4:

செஃப் வான் என்று அழைக்கப்படும் பிரபல செஃப் டத்தோ ரெட்சுவான் இஸ்மாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 3) இன்ஸ்டாகிராம் பதிவில் அவரது தற்போதைய நிலை குறித்து செஃப் வான் தெரிவித்தார்.

இப்பதிவில் “பிற்பகல் 3 மணிக்கு, நிணநீர் கணுக்களில் புற்றுநோய் இருப்பதை என் மருத்துவர் உறுதிப்படுத்தினார் என்றும், இது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், 70 முதல் 80 விழுக்காடு குணமடைய வாய்ப்புக்கள் இருப்பதாக புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜெய் சூரியன் கூறியதுடன், இதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனக்கு விளக்கினார்.

65 வயதான அவர் புற்றுநோயிலிருந்து குணமாக அவரது ரசிகர்கள் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here