சாலையின் வெள்ளைக் கோட்டை கடந்து வாகனத்தை நிறுத்த வேண்டாம்- போலீசார் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்டு 4:

சாலையின் போக்குவரத்து சமிக்ஞைக்கு எதிராக , வெள்ளைக் கோட்டிற்கு அப்பால் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக Ops Garisan Putih எனும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நாடு தழுவிய போக்குவரத்து பிரச்சாரத்தின் அடிப்படையில், சாலையின் வெள்ளைக் கோடை தாண்டி வாகனத்தை நிறுத்தினால் RM2,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும் என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி ஓமர் கூறினார்.

இது சாலைப் போக்குவரத்து விதிகளின் (LN166/1959) விதி 38ன் கீழ் குற்றமாகும்.

இந்தச் செயல் சாலை நெரிசலை ஏற்படுத்துவதால், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், வெள்ளைக் கோட்டிற்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

“இது மற்ற சாலை பயனர்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துக்களையும் விளைவித்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here