தீ விபத்தில் இருந்து அதிர்ஷடவசமாக தப்பித்த 5 குடும்ப உறுப்பினர்கள்

ஜோகூர் பாரு, ஸ்கூடாயில் உள்ள ஸ்ரீ அவானா டவுன்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் போது அங்கு வசித்த 5 பேர் கொண்ட குடும்பம் வெளியே இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தந்தை வேலையில் இருந்தார். அதே நேரத்தில் தாயும் 3, 6 மற்றும் 8 வயதுடைய மூன்று குழந்தைகளும் அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.

ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று படுக்கையறைகளில் ஒன்றில் தீப்பிடித்ததாக ஸ்கூடாய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் தளபதி சைஃபுல்பஹ்ரி சஃபர் தெரிவித்தார்.

தீயில் அறை இடிந்ததாகவும், மீதமுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 80% சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தீ விபத்திற்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here