சிலாங்கூரில் PH-BN கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் – அமிருடின் நம்பிக்கை

சிகின்சான், ஆகஸ்ட்டு 9:

வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் (PH ) – பாரிசான் நேஷனல் (BN ) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் மாநில அரசாங்கத்தை அமைக்கும் என்று, சிலாங்கூர் பராமரிப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூரிலுள்ள மொத்தம் 56 மாநில சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் PH-BN கூட்டணி குறைந்தபட்சம் 38-40 இடங்களை வெல்ல முடியும் என்றும், பிஎன் ஆறு தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் திறன் கொண்டதாகக் காணப்படுகிறது என்று, தாமான் சிகிஞ்சான் டாமையில் நேற்றிரவு நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர் இவ்வாறு கூறினார்.

மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் 40 இடங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here