ஆஸ்திரேலியாவிலிருந்து உயிருள்ள பசு, எருமை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு மலேசியா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் இறக்குமதி செய்யப்பட்ட சில மாடுகளின் உடல்களில் ஆங்காங்கே வீக்கம் காணப்பட்டதால், இந்தோனேசியா அண்மையில் அத்தகையை தடையை விதித்தது.
பிராணிகளுக்கு நோய் இல்லை என்பதை உறுதி செய்து தடையை விரைவில் நீக்குவதற்கு மலேசியாவுடன் இணைந்து செயல்படுவதாக ஆஸ்திரேலியா கூறியது.
இறக்குமதி செய்யப்பட்ட பசு, எருமை மாடுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகும் இந்தோனேசியா கட்டுப்பாடுகளை விதித்தது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய உரிய சோதனைகள் நடத்தப்படுகின்றன.