வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த இளைஞர்களுக்கு டாக்டர் வான் அசிஸா அறிவுறுத்தல்

சனிக்கிழமை நடைபெறும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து, மாநிலத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியும் என நம்பப்படும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் மக்கள் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உறுதியை வெளிப்படுத்த வேண்டும் என்றார். ஒன்றாக இணைந்து நமது நாட்டை அபிவிருத்தி செய்யுங்கள். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. வெளியே சென்று வாக்களிப்போம் என்று அவர் செமராக் மெர்டேகா நிகழ்ச்சியில் கூறினார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, தெரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கும், கோல தெரெங்கானு இடைத்தேர்தலுக்கும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வாக்குப்பதிவு தேதியாக தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் வான் அசிஸா, சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால் எளிதில் பாதிக்கப்படுவதை இளைஞர்களுக்கு நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here