ஜோகூர் பாரு: கோத்தா திங்கி தாமான் டமாய் அருகே, கவச ராணுவ வாகனத்துடன், கார் விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் காயமடைந்தனர். இரவு 8.28 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் வந்ததை அடுத்து 15 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக புங்காய் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தலைவர் டெடி போர்ஹான் உமாலி தெரிவித்தார்.
54 வயதான பெண் மற்றும் ஏழு, ஐந்து மற்றும் நான்கு வயதுடைய மூன்று சிறுவர்கள் ஹோண்டா ஒடிஸி மினிவேனில் இருந்ததாக அவர் கூறினார். தெலுக் சிப்பாங் முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கவச வாகனம், ஹோண்டா ஒடிஸி மீது மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதிர்ஷ்டவசமாக, அந்த பெண்ணும் மூன்று குழந்தைகளும் அவர்களின் வாகனத்தின் உள்ளே சிக்கவில்லை, என்று அவர் கூறினார். கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், கவச வாகனத்தில் இருந்த இரு ராணுவ வீரர்களும் காயமின்றி இருந்ததாகவும் அவர் கூறினார்.









