மாநில வாக்குப்பதிவு: மாலை 4 மணி நிலவரப்படி 56% -70% வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது

 

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 12:

15வது மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைவதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி, திரெங்கானு, கெடா மற்றும் பினாங்கில் முறையே 70%, 68% மற்றும் 67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், நெக்ரி செம்பிலான் மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களில் முறையே 65%, 62% மற்றும் 56% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், இன்று நடைபெறும் கோலா திரெங்கானு இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 67% வாக்குகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here