நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார்களின் மகன்கள் மாநிலத் தேர்தலில் தோல்வி

போர்ட்டிக்சன், ஆகஸ்ட்டு 12:

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார்களின் மகன்கள் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

கிளவாங் மாநிலத் தொகுதிக்கு பெரிகாத்தான் நேஷனலின் கீழ் போட்டியிட்ட டேனி ரைஸ் (4,021 வாக்குகள்), பக்காத்தான் ஹராப்பானின் (4,598 வாக்குகள்) பக்ரி சாவிரிடம் தோற்றார்.

இவர் நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ ரைஸ் யாதிமினின் மகனாவார்.

இதற்கிடையில், பாரிசான் நேஷனல் கோட்டையான பாகன் பினாங்கில், பாரிசானின் முகமட் நஜிப் முகமட் இசா (7,495 வாக்குகள்), பெரிகாத்தானின் அப்துல் ஃபதாஹ் ஜகாரியாவிடம் (10,921 வாக்குகள்) தோற்றார்.

முகமட் நஜிப் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமத்தின் மகன் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here