கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 15:
ஒற்றுமை அரசாங்கத்தின் உணர்விற்கு மதிப்பளித்து, பினாங்கு மாநில செயற்குழுவில் பாரிசான் நேசனல் (BN ) சார்பில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க DAP ஒப்புக் கொண்டுள்ளது என்று, அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
நேற்று இரவு கூடிய DAP மத்திய செயற்குழு கூட்டத்தில், இந்த விஷயம் தொடர்பில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சராகவும் இருக்கும் லோக் தெரிவித்தார்.
“நடந்து முடிந்த தேர்தலில், பினாங்கில் இரண்டு BN வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால், பினாங்கு மாநில அரசாங்க நிர்வாகக் குழுவில் அமர்வதற்கு நாம் நிச்சயமாக BN பிரதிநிதியை நியமிப்போம்” என்று, அவர் நேற்று இரவு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.







