ஜோகூர் பாரு, ஆகஸ்ட்டு 18:
சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்க இதுவரை தனிநபர் ஒருவர் மட்டுமே வைப்புப்பணம் செலுத்தியுள்ளதாக ஜோகூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகியவற்றின் இடைத்தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் நோர் நெக்மன் ஜெய்மோன் தெரிவித்தார்.
8 வேட்பு மனுக்களில் இரண்டு பூலாய் நாடாளுமன்றத்திற்கானவை, மீதமுள்ள ஆறு சிம்பாங் ஜெராமுக்காக இருந்தன. ஆனாலும் ஒரு நபர் மட்டுமே சட்டமன்ற தேர்தலுக்கு வைப்புத்தொகையை செலுத்தியுள்ளார், ”என்று இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) ஜோகூர் சுற்றுலா தகவல் மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
இருப்பினும், டெபாசிட் தொகையை செலுத்திய நபர் பற்றிய விவரங்களை நெக்மேன் மறுத்துவிட்டார்.








