நடைபெறவுள்ள சிங்கப்பூர் தேர்தலில், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, அரசாங்க முதலீட்டு நிதியத்தின் (ஜிஐசி) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கோக் சோங், 75, என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியன், 75, ஆகிய மூவருக்கும் அதிபர் தேர்தல் குழு தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தொழில் முனைவர் ஜார்ஜ் கோ, 63, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதி பெறவில்லை.
இவ்விவரங்களைத் சிங்லப்பூர் தேர்தல் துறை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதிபர் தேர்தல் குழுவிற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தர்மன், இங், டான் ஆகிய மூவரும் நேர்மை, நற்பண்பு, நன்மதிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது.




















