ஜாஹிட் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், அன்வர் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவில்லை- டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 18:

கடந்த வாரம் நடந்து முடிந்த ஆறு மாநிலத் தேர்தல்களில் அம்னோவின் பேரழிவு வெளிப்படையாக நிரூபணமாகியுள்ளது. அவர்களின் சொந்த உறுப்பினர்களே இப்போது கட்சியை இகழ்ந்துள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அம்னோ தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமீட் விலக வேண்டும் என்றும், அவர் கட்சியை வழிநடத்த முடியாது என்றும் முன்னாள் பிரதமரான அவர் கூறினார்.

அம்னோவின் செயல்பாடுகள் சில ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாக டாக்டர் மகாதீர் கூறினார், ஏனெனில் அம்னோவின் போராட்டங்களுக்கு அவர்கள் முதலிடம் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்கள் எதைப் பெற முடியும் என்பதுதான் அதிகம். எப்போது பணம் ராஜாவாகியதோ அப்போது அம்னோ விழுந்தது. இப்போது அம்னோ அதன் உறுப்பினர்களால் வெறுக்கப்படுகிறது.

உதாரணமாக “தலைவர்களுடன் உடன்படாதவர்கள் அகற்றப்படுவார்கள். அதுதான் இப்போதுள்ள அம்னோ. இது முன்னர் அமைக்கப்பட்ட அம்னோ அல்ல, மாறாக வெவ்வேறு இலட்சியங்களைக் கொண்டவர்களால் மாற்றம் செய்யப்பட்ட ஒன்று” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்ட 108 இடங்களில் அம்னோ 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறித்து டாக்டர் மகாதீரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அவ்வாறு கூறினார்.

ஜாஹிட்டுக்கு என்ன ஆலோசனை வழங்க முடியும் என்று கேட்டதற்கு, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் ஜாஹிட் அப்பதவிக்கு தகுதியற்றவர். பதவியால் அவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று நினைத்ததால் தான் அவர் துணைப் பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார் என்று நான் நம்புகிறேன், மேலும் அவரைக் காப்பாற்றக்கூடிய எந்தவொரு செல்வாக்கும் அங்கு பலனளிக்காது ,” என்று அவர் கூறினார்.

மேலும் பிரதமர் பதவியை வகிக்கக் கூடாது என்று கூறி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும் டாக்டர் மகாதீர் கடுமையாக விமர்சித்தார்.

“அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல, அவர் தனது எதிரிகளிடம் வாக்குறுதி அளித்தார், அதனால் தான் அவர் பிரதமராக முடிந்தது” என்று அவர் கூறினார்.

மலாய்க்காரர்கள் பக்காத்தான் ஹராப்பானையும் பாரிசான் நேசனலையும் நிராகரித்ததாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதால், அன்வாரை பதவி விலகுமாறு பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அழைப்பு விடுத்தது பற்றி, அதற்குச் சார்பாக டாக்டர் மகாதீர் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here