சாலைத் தடுப்பில் கார் மோதியதில் பெண் பலி, ஐவர் காயம்

மிரி, ஆகஸ்ட்டு 21:

ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள Pan-Borneo சாலையில் சுவாய் பகுதியில் அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் உலோகத் தடுப்பில் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் டயானா டின்சி டக்ளஸ் (20) என அடையாளம் காணப்பட்டார், விபத்து நடந்த இடத்திலேயே அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டதாக பத்து நியா தீயணைப்பு நிலையத் தலைவர் ராரி பிஞ்சி தெரிவித்தார்.

இவ்விபத்தில் “மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்தனர். மேலும் அவர்கள் காரில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று மாலை 4.36 மணியளவில், பத்து நியா தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குழு உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் குழு வந்தபோது, ​​காரின் பின் இருக்கையில் பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றி இருந்தார், அவரை தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்து அகற்றினர் இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை அங்கிருந்த சுகாதாரத்துறை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here