பீருடன் கார உணவு வகை; Carlsberg இன் புதிய OFFER! Aug. 18 முதல் Sept. 2 வரை மட்டுமே…

பெட்டாலிங் ஜெயா: (S.Vengadesh, Editor MO- HQ)

மிகவும் மென்மையான மதுபானமாக கருதப்படும் Carlsberg Smooth Draught, பீருடன் கார உணவு வகைகளை கொண்டாட Carlsberg நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

Carlsberg Smooth Draught‘s Real Spicy Real Smooth எனும் இந்த நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள JioSpace நடைபெறுகின்றது.

இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பீருடன் கார உணவு வகைகளை சாப்பிட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகின்றது. இதுதவிர இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டா புகைப்பட பகுதி, கவர்ச்சிகரமான விளையாட்டுகள், செயல்முறை பயிலரங்கு, டிஜே படைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு இலவசம்.

நீங்கள் உங்களுடைய வளர்ப்புப் பிராணி களை வார இறுதியில், பொது விடுமுறை தினங்களில் காலை 11 மணி தொடங்கி மதியம் 2 மணிவரையில் அழைத்து வரலாம்.

நிகழ்ச்சிக்கு வந்ததும் இலவசமாக ஒரு போத்தல் Carlsberg Smooth Draught வழங்கப்படும். இதன்மூலம் நீங்கள் அந்த மென்மையான மதுபானத்தை அருந்தி மகிழலாம். தொடர்ந்து பலதரப்பட்ட கார உணவு வகைகளும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்படும்.

புகழ் பெற்ற சமையல் வல்லுநர்களான மான்ஸ்டர் செஃப் சேர்ந்த சமையல் கலை வல்லுநர் Chef KC, Bean Jr, Churn உள்ளிட்டோரின் devil’s curry pocket buns, nasi lemak rice bomb, மூன்று கார நிலையிலான Mala Tau Fu Fa உட்பட பல உணவு வகைகளும் இதில் பரிமாறப்படும்.

இந்நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக Apom & Gumme பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படும். உள்நாட்டு அம்சத்தோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் டி சர்ட்டுகள், கைத்தொலைபேசி, அழகு பொருட்களும் இதில் விற்கப்படும்.

இதனிடையே நாட்டின் புகழ்பெற்ற டிஜே கலைஞர்களான Bass Agents, Ken Fung, Ramseywestwood, Mizzkeym Naro& Sim – உள்ளிட்டோரின் படைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதுதவிர சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்களும் படைப்புகளை படைப்பர்.

இதனிடையே சனி-ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை நாட்களில் காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து பேசிய கார்ல்ஸ்பெர்க் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டெபானோ கிளினி கடந்தாண்டு இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உயர்தர அனுபவத்தை வழங்கியிருந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலவிதமான பரிசுகளை வென்றனர்.

அந்த நிகழ்ச்சியைக் காட்டிலும் இவ்வாண்டு மிகப்பெரிய அளவில் இந்நிகழ்ச்சி திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here