ஜோகூர் பாரு:
ஊழல் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கான திட்டங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும், ஊழலுக்கு எதிரான போரை அரசாங்கம் தொடரும் என்றும் பிரதமர் கூறினார்.
“ஊழலில் ஈடுபடுபவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும்” என்று அவர் பூலாயில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு அமர்வின் போது, அவர் ஆற்றிய உரையின் போது கூறினார்.
உதாரணமாக, ஒரு பாலம் கட்டுவதற்கான செலவு RM200 மில்லியனில் இருந்து RM300 மில்லியனாக உயர்த்தப்பட்டால், அங்கு ஏதோ சரியில்லை என்று அர்த்தம் என்றாரவர்.
சில விடயங்களில் அரசாங்கம் தலையிடலாம் ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விடயங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது இந்திய அரசு விளைபொருட்கள் (உதாரணமாக வெங்காயம்) மீதான ஏற்றுமதி வரியை 40% உயர்த்தியுள்ளது என்றார்.
“நாங்கள் நிறைய வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம், அதனால் மேலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.









